இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டை ஷெட்யூல் செய்து போஸ்ட் செய்வது எப்படி என்பது குறித்த 5 தகவல்கள்

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்,டுவிட்டர், வாட்ஸ் அப்-ஐ அடுத்து மிகப்பெரிய பயனாளர்களை கொண்டது இன்ஸ்டாகிராம்.

Written By:

சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக்,டுவிட்டர், வாட்ஸ் அப்-ஐ அடுத்து மிகப்பெரிய பயனாளர்களை கொண்டது இன்ஸ்டாகிராம். இந்நிலையில் ஃபேஸ்புக், மற்றும் வாட்ஸ் அப்பில் அவ்வப்போது பலவித மாற்றங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது சில சில மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது என்ன வசதி புதியதாக அறிவிக்கப்பட்டது என்பதை பார்ப்போமா

இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டை ஷெட்யூல் செய்து போஸ்ட் செய்வது எப்படி என்பது

கடந்த ஆண்டில் இருந்து இந்த ஆண்டில் இன்ஸ்டாகிராம் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் காரணமாக இந்த சமூக வலைத்தளத்திற்கு பல புதிய பயனாளிகள் இணணந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் இன்ஸ்டாகிராம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது.

உங்கள் பட்ஜெட்டை விட மலிவான விண்டோஸ் லேப்டாப்கள் எது.?

ஃபேஸ்புக்கில் ஒரு போஸ்டை பதிவு செய்துவிட்டு அது எப்போது பப்ளிஷ் ஆக வேண்டும் என்பதை ஷெட்யூல் செய்யும் வழக்கம் உண்டு. இந்த வசதி தற்போது இன்ஸ்டாகிராமில் வந்துள்ளது. இந்த வசதியால் இதன் பயனாளிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் போஸ்ட்டை எப்படி ஷெட்யூல் செய்வது என்பதை தற்போது பார்ப்போமா?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கோஷெட்யூலுடன் சைன் - அப் செய்ய வேண்டும்

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது coschedule.com என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயர், இமெயில் , மற்றும் முகவரி ஆகியவற்றை பதிவு செய்து பின்னர் பாஸ்வேர்டு-ஐ பதிவு செய்யவும். இதில் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் மேற்கண்ட விபரங்களை மனதில் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கோ-ஷெட்யூல் காலண்டருக்கு செல்ல வேண்டும்

கோ-ஷெட்யூலில் வெற்றிகரமாக சைன் - அப் செய்த பின்னர் நீங்கள் இதன் ஹோம் பக்கத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அதன் பின்னர் நீங்கள் காலண்டர் பகுதிக்கு செல்ல வேண்டும். அதன் பின்னர் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய போஸ்ட் மற்றும் இமேஜை அங்கு பதிவு செய்யுங்கள்

கோஷெட்யூலை இன்ஸ்டாகிராமுடன் இணைக்க வேண்டும்

உங்கள் போஸ்ட் பதிவு செய்யப்பட்டவுடன் உங்களுடைய யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும். இந்த வசதி உங்களுக்கு 14 நாட்கள் இலவசமாக அளிக்கப்படும். இந்த வசதியில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் இந்த வசதியை டிஸ்கனெக்ட் செய்து கொள்ளலாம்.

இன்ஸ்டாகிராம் போஸ்டை ஷெட்யூல் செய்யுங்கள்

இன்ஸ்டாகிராம் லிங்கை இணைத்தவுடன் நீங்கள் அதில் உள்ள தேதி, நேரம் ஆகியவற்றை நீங்கள் விரும்பும் வகையில் அதில் உள்ள ஆப்சன்படி மாற்றி கொள்ளலாம். இதுதான் உங்கள் போஸ்ட் வெற்றிகரமாக ஷெட்யூல் செய்யும் முறை

ஷெட்யூல் போஸ்ட் பப்ளிஷ் ஆனவுடன் நோட்டிபிகேஷன்

இதில் உள்ள சிறப்பு அம்சம் என்ன என்றால் நீங்கள் ஷெட்யூல் செய்த போஸ்ட் குறிப்பிட்டு ஷெட்யூல் செய்த நேரத்தில் பப்ளிஷ் ஆனவுடன் உங்களுக்கு இமெயில் மூலம் நோட்டிபிகேஷன் வரும். இந்த நோட்டிபிகேஷன் மூலம் உங்கள் போஸ்ட் பப்ளிஷ் ஆகிவிட்டது என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
Follow these 5 simple steps to schedule posts on Instagram and get notified after publishing.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்