இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்டிக்கர் என்னும் அதிசயம்

பிரபல சமூக வலைத்தளங்களின் ஒன்றான இன்ஸ்டாகிராம் பொதுமக்களிடையே மிகவும் பிரபலமான ஒன்று, குறிப்பாக செலிபிரிட்டிகள் தங்களுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ய அதிகம் விரும்புவர். இந்த இன்ஸ்டாகிராமும் அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரவும், புதிய வாடிக்கையாளர்களை இழுக்கவும் புதுப்புது திட்டங்களை அறிவித்து வருகிறது.

இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்டிக்கர் என்னும் அதிசயம்

அந்த வகையில் தற்போது புதியதாக அறிவித்துள்ள வசதி ஜியோஸ்டிக்கர்ஸ் என்னும் வசதிதான். இந்த டிஜிட்டல் ஸ்டிக்கரை இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் தங்களுடைய பதிவுகளில் தற்போது இருக்கும் லொக்கேஷன்களுக்கு ஏற்றப்டி ஸ்டிக்கர்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

இன்னும் கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால் பயனாளி உலகின் எந்த பகுதியில் இருக்கின்றாரோ அந்த பகுதியில் உள்ள பிரபல இடங்கள் குறித்த ஜியோஸ்டிக்கரை பயன்படுத்தி கொள்ளலாம்'

இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ள ஜியோஸ்டிக்கர் என்னும் அதிசயம்

இன்ஸ்டாகிராம் பயனாளிகள் இந்த டிஜிட்டல் ஸ்டிக்கரை விதவிதமாக பயன்படுத்தி கொள்ளலாம். தங்கள் பதிவுகளுக்கு அல்லது புகைப்படங்களுக்கு இடையில் இந்த ஸ்டிக்கரை தேவையான சைசில் மாற்றி கொள்ளலாம், அல்லது ஒன்றிரண்டு ஸ்டிக்கர்களை மிக்ஸ் செய்தும் கொள்ளலாம், தங்களுடைய பதிவுகளுக்கு பொருத்தமான ஸ்டிக்கரையும் தேர்வு செய்து கொள்ளலாம் என பல வசதிகள் உண்டு.

பயனாளிகளின் பதிவும், அந்த பதிவுக்கும், பயனாளி இருக்கும் லொகேஷனுக்கும் பொருத்தமான ஸ்டிக்கரோடு இருந்தால் அந்த பதிவை பார்ப்பவர்களுக்கு ஒரு கவர்ச்சி ஏற்படும் என்பதை சொல்ல தேவையே இல்லை.

தெரியுமா.? வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்கலாம்.!

இவ்வளவு வித்தியாசமான அழகான வசதி தற்போது நியூயார்க் மற்றும் ஜகார்த்தா பகுதிக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு இடங்களிலும் உள்ள இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் ஒத்துழைப்பை பொறுத்து படிப்படியாக உலகின் அனைத்து பகுதி இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வசதி குறித்து நியூயார்க் மற்றும் ஜகார்த்தா பகுதியில் உள்ள பயனாளிகள் கூறியபோது, 'ஒரு புகைப்படம் அல்லது வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தவுடன் மேல்புறத்தில் உள்ள ஜியோஸ்டிக்கர் என்ற ஐகானை க்ளிக் செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு க்ளிக் செய்தால் நீங்கள் நியூயார்க் அல்லது ஜகார்த்தா ஆகிய இரண்டு பகுதியில் எந்த பகுதியில் இருந்தாலும் அந்த பகுதியின் பிரபலமான இடங்களின் டிஜிட்டல் ஸ்டிக்கர்கள் உங்கள் முன் தோன்றும்.

ஒவ்வொன்று மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருக்கும் என்பதால் உங்களுக்கு எந்த ஸ்டிக்கரை பயன்படுத்துவது என்ற பிரச்சனை மட்டுமே ஏற்படும்.

இந்த வசதியை தங்கள் பகுதியில் அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம் நிர்வாகத்திற்கு நியூயார்க் மற்றும் ஜகார்தா பயனாளிகள் நன்றி கூறியுள்ளனர். மேலும் இந்த வசதியை பெறுவதற்கு இன்ஸ்டாகிராம் பயனாளிகள் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராமை அப்டேட் செய்திருக்க வேண்டும். அதாவது இன்ஸ்டாகிராம் 10.11 வெர்ஷனை அப்டேட் செய்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

English summary
Instagram Stories now includes Geostickers.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்