மக்கள் கையில் அரசு சேவைகள் : வாய் பிளக்க வைக்கும் ஒற்றை செயலி.!!

Written By:

செயலிகளுக்கு எல்லாம் செயலியாக இருக்கும் செயலி ஒன்றை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. UMANG என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியில் சுமார் 200க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, மற்றும் உள்ளூர் நிர்வாக சேவைகளை இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே செயலியில் அனைத்து நிர்வாகங்களையும் கொண்டு வரும் முயற்சியில் உருவாக்கப்பட இருக்கும் இந்த செயலியை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த செயலியை கொண்டு பாஸ்போர்ட் பதிவு செய்தல், வருமான வரி தாக்கல் செய்வது மற்றும் இதர கட்டணங்களை செலுத்துவதோடு பல்வேறு அரசு சேவைகளை மொபைலில் இயக்க முடியும். 'இன்று எல்லோரும் கையிலும் இண்டர்நெட் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் கருவி நிச்சயம் இருக்கின்றது, இதனால் குடிமக்கள் இருக்கும் இடத்திலேயே சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளோம்' என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

UNMANG

இந்த செயலியின் விரிவாக்கம் Unified Mobile Application for New-age Governance, அதாவது புதுயுக ஆட்சிக்கான ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் செயலி ஆகும். இந்த செயலியானது மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையின் தேசிய மின் ஆளுகை பிரிவின் கீழ் உருவாக்கப்பட இருக்கின்றது.

சேவை

தேசிய உதவித்தொகை, மருத்துவம், பாஸ்போர்ட் சேவா, மகளிர் பாதுகாப்பு, இ-போஸ்ட், குற்றம் மற்றும் குற்றவியல் கண்கானிப்பு, நெட்வர்க் மற்றும் அமைப்புகள். வணிக வரி, வருமான வரி, மாநில கல்வித்துறை, சிபிஎஸ்இ, இ-நகராட்சி, ஐஆர்சிடிசி, சேவை கட்டணங்கள் உள்ளிட்ட பல்வேறு இதர அரசு சேவைகளை இந்த செயலியின் மூலம் இயக்க முடியும்.

காலம்

இந்த ஆண்டின் இறுதிக்குள் சுமார் 50 சேவைகளையும் அடுத்த மூன்றாண்டுகளில் இந்த எண்ணிக்கையை 200 ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

இந்த செயலியானது ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட தகவல்களையும் பதிவு செய்து சம்பந்தப்பட்ட சேவைகளை பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செயிலயில் ஆதார் அட்டை, டிஜி லாக்கர் போன்றவற்றையும் இணைத்து கொள்ளும் வசதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயன்பாடு

ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் இணைப்பு கொண்ட அனைவவரும் இயக்கும் படி இந்த செயலி வடிவமைக்கப்பட இருக்கின்றது. மேலும் இதே சேவைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாவர்களுக்கும் இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் மூலம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

மொழி

தற்சமயம் வரை இந்த செயலியானது ஆங்கிலத்தோடு சேர்த்து மொத்தம் 13 மொழிகளில் பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சேவை

எட்டு மாதங்களாக கிடப்பில் இருக்கும் இந்த செயலியில் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற தனியார் நிறுவனங்களை அரசு எதிர்பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவை

எனினும் 50 சேவைகளை கொண்ட செயலியானது விரைவில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் படிக்க

நாடு முழுவதும் இண்டர்நெட் இணைப்பு : மத்திய அரசு திட்டம்.!!

குட்டையை குழப்பிய கூகுள் : சிதறமால் சிக்கிய வினோதங்கள்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
India's 200 Public Services On Single App Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்