ஆப்பிள் ஐபோனில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளை கையாள்வது எப்படி?

By Siva
|

இன்று உலகில் மிக அதிக நபர்கள் பயன்படுத்தும் ஆப்களில் ஒன்று வாட்ஸ் அப். பொழுது போக்கிற்காக அரட்டை அடிப்பது மட்டுமின்றி ஆக்கபூர்வமான முறையிலும் வாட்ஸ் அப்-ஐ உலகம் முழுவதிலும் உள்ள பயனாளிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆப்பிள் ஐபோனில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் கணக்குகள

வாட்ஸ் அப்-ன் வளர்ச்சியை பார்த்து அதிர்ந்து போன ஃபேஸ்புக் நிறுவனர் மிகப்பெரிய தொகையை கொடுத்து அதை கையகப்படுத்தி கொண்டார் என்பது தெரிந்ததே. இந்நிலையில் வளர்ந்து வரும் போட்டியான ஆப் உலகில் வாட்ஸ் அப் தங்களது வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய அவ்வப்போது புதுப்புது வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. குறிப்பாக இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட வசதிகளை வாட்ஸ் அப் அறிமுகம் செய்து வருகின்றது.

வாட்ஸ்ஆப் மெசேஜை படிக்காமலேயே லாஸ்ட் சீன் செக் செய்வதெப்படி.?

இருப்பினும் இதில் ஒரே ஒரு முக்கியமான வசதி இல்லை என்ற குறை இதன் பெரும்பாலான வாடிக்கையாளர்களுக்கு உள்ளது. அதுதான் ஒரே மொபைல் போனில் இருந்து இரண்டு வாட்ஸ் அப் கணக்குகளை உபயோகிக்கும் முறை. தற்போதைக்கு ஒரே ஒரு வாட்ஸ் அப் கணக்கை மட்டுமே உபயோகிக்க முடிகிறது என்பது ஒரு மிகப்பெரிய குறையாக இருந்து வரும் நிலையில் இந்த குறையை போக்க நமது டெக்னாலஜி நபர்கள் யோசித்து வைத்துள்ள ஒருசில வழிகளை தற்போது பார்ப்போம்

ஹேக்கர்களிடம் இருந்து ஜிமெயில் அக்கவுண்ட்டை பாதுகாக்க 5 வழிகள்

ஆப்பிள் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு மாடல் போன்களில் இரு வாட்ஸ் அப் கணக்குகளை கையாள முடியாத நிலையில் தற்போது அதை எப்படி செயல்படுத்துவது என்பதை பார்ப்போம்

வாட்ஸ் அப் ஆப்-ஐ எங்கிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்?

வாட்ஸ் அப் ஆப்-ஐ எங்கிருந்து டவுன்லோடு செய்ய வேண்டும்?

முதலில் வாட்ஸ் அப் சாட் ஆப்-ஐ அதிகார்பூர்வமான ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்ய வேண்டும். ஏற்கனவே நீங்கள் டவுன்லோடு செய்து வைத்திருந்தால் நேரடியாக இரண்டாவது ஸ்டெப்புக்கு சென்றுவிடுங்கள்

சபாரி பிரெளசர் இதற்கு கட்டாயம் வேண்டும்

சபாரி பிரெளசர் இதற்கு கட்டாயம் வேண்டும்

வாட்ஸ் அப் ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தவுடன் உங்கள் ஆப்பிள் ஐபோனில் சபாரி பிரெளசரை ஒப்பன் செய்து அதில் ios.othman.tv என்ற URL ஐ டைப் செய்யவும்.

வாட்ஸ் அப் ப்ளஸ்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

வாட்ஸ் அப் ப்ளஸ்-ஐ டவுன்லோடு செய்ய வேண்டும்

சபாரி பிரெளசரில் மேற்கண்ட URL ஐ டைப் செய்தவுடன் தோன்றும் பக்கத்தில் முதலில் உங்களுக்கு தெரிந்த மொழியை முதலில் தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த பக்கத்தை வாட்ஸ் அப் ப்ளஸ் பகுதி வரும் வரை ஸ்குரோல் செய்யுங்கள்

வாட்ஸ் அப் ப்ள்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்யவும்

வாட்ஸ் அப் ப்ள்ஸ்-ஐ இன்ஸ்டால் செய்யவும்

நீங்கள் ஸ்குரோல் செய்த பகுதியில் வாட்ஸ் அப் ப்ளஸ் பகுதியில் உள்ள இன்ஸ்டால் தி ஆப் என்ற பாப்-அப் பகுதியை க்ளிக் செய்து முதலில் இன்ஸ்டால் செய்யவும்

செட்டிங்கை மாற்றுங்கள்

செட்டிங்கை மாற்றுங்கள்

இந்த ஆப்-ஐ டவுன்லோடு செய்தவுடன் பின்னர் செட்டிங்கை முதலில் மாற்ற வேண்டும். அதற்கு Settings > General > Profile enable> Trust VNE Software என்று செய்ய வேண்டும். இதன் பின்னர் உங்கள் ஐபோனில் பல அக்கவுண்டுக்களை உபயோகிக்கும் வகையில் மாறும். இதன் பின்னர் நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ் அப் அக்கவுண்டுக்களை பயன்படுத்த அறிவுரை தேவையில்லை என்றே நினைக்கின்றோம்.

மேலும் இந்த வழிமுறைகள் அனைத்தும் iOS 9 மற்றும் அதற்கு மேல் உள்ள மாடல்களில் மட்டுமே செயல்படும். ஒருவேளை ஒருசில காரணங்களால் இந்த வழிமுறைகள் செயல்படவில்லை என்றால் அதற்கு நாங்கள் எந்த வழியிலும் பொறுப்பு கிடையாது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
This simple trick allows you to run multiple WhatsApp accounts on your Apple iPhone. Read more to find out how.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X