ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் DSLR கேமிராவை எப்படி கண்ட்ரோல் செய்வது?

Written By:

ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் விதவிதமான கேமிராக்கள் இருந்தாலும் DSLR கேமிராவை பயன்படுத்தி புகைப்படமும் வீடியோவும் எடுப்பதே ஒரு தனி அனுபவம்தான்.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மூலம் DSLR கேமிராவை எப்படி கண்ட்ரோல் செய்வது?

ஆண்ட்ராய்டு போனில் புகைப்படம் எடுக்கும்போது இல்லாத பல வசதிகள் இந்த DSLR கேமிராவில் இருப்பதால் பலர் விலை அதிகம் ஆனாலும் பரவாயில்லை என்று இவ்வகை கேமிராக்களை வாங்குகின்றனர். மேலும் இவ்வகை கேமிராக்களில் இருக்கும் ரிமோட் கண்ட்ரோல் பெருவாரியான நபர்களுக்கு தெரிவதில்லை என்பதும் ஒரு சோகமான தகவல்

2ஜி டேட்டா பேக் கொண்டு 3ஜி வேகத்தில் பிரவுஸிங் செய்வது எப்படி?

ஒருவேளை உங்கள் கேமிராவில் ரிமோட் கண்ட்ரோல் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். உங்களுடைய ஸ்மார்ட்போன் ஒரு ரிமோட் கண்ட்ரோலாக செயல்படும். எப்படி என்று கேட்கின்றீர்களா? அதுக்குத்தான் இருக்கவே இருக்குது ஆப்ஸ்கள். கேமிராவின் ரிமோட் கண்ட்ரோலுக்காகவே ஏகப்பட்ட ஆப்ஸ்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் குவிந்து கிடக்கின்றது.

ஏர்டெல்-சியோமி ஸ்பெஷல் : 3ஜிபி விலையில் 3 மாத கால 15ஜிபி டேட்டா..!

இந்நிலையில் ஒரு DSLR கேமிராவின் ரிமோட் கண்ட்ரோலாக ஸ்மார்ட்போனை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

DSLR கண்ட்ரோலர் ஆப்ஸை டவுன்லோடு செய்யவும்

DSLR கேமிராவுக்கு ரிமோட் கண்ட்ரோலாக செயல்படும் DSLR கண்ட்ரோலர் ஆப்-ஐ முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் டவுன்லொடு செய்து இன்ஸ்டால் செய்யவும். இந்த ஆப்ஸ் தற்போதைக்கு பீட்டா லெவலில் இருந்தாலும் உங்கள் கேமிராவுக்கு ஒரு மிகச்சிறந்த ரிமோட் கண்ட்ரோலாக வேலை செய்யும்.

DSLR கேமிராவுடன் ஸ்மார்ட்போனை கனெக்ட் செய்யவும்

கேனான் DSLR கேமிராக்களுக்கு DSLR கண்ட்ரோலர் ஆப் மிக பொருத்தமாக வேலை செய்யும் என்பது உறுதி. எனவே உங்கள் ஆண்ட்ராய்டு போனை DSLR கேமிராவுடன் யூஎஸ்பி கேபிள் மூலம் கனெக்ட் செய்யவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்மார்ட்போன் கண்ட்ரோல் மூலம் புகைப்படம் எடுங்கள்

இப்போது நீங்கள் உங்கள் DSLR கேமிராவுடன் விதவிதமாக ஃபோகஸ் செய்து புகைப்படம் எடுக்கலாம். அதுமட்டுமின்றி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு ஃபோகஸையும், புகைப்படத்தையும் இப்போது நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளேவில் பார்க்கலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வேறு என்னென்ன வசதிகள் இருக்குது தெரியுமா?

மேலும் உங்கள் ஸ்மார்ட்போன் ஸ்க்ரீனில் வலது ஓரத்தில் உள்ள செட்டிங் பட்டனை அழுத்து மேலும் சில வசதிகள் இருப்பதை அறிந்து கொள்ளலாம். டைம் லேப்ஸ் செய்வது, ஆட்டோ எக்ஸ்போஸ் செய்வது உள்ளிட்ட பல வசதிகள் அதில் உங்களுக்கு தோன்றும். இந்த வசதிகளை பயன்படுத்தி புகைப்படம் எடுத்து பல்வேறு அனுபவங்களை பெறுங்கள்

இப்ப திருப்தியா உங்களுக்கு?

இந்த DSLR கண்ட்ரோல் ஆப் உங்களுக்கு எந்த அளவுக்கு புகைப்படம் எடுக்க உதவியாக இருக்கின்றது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும். என்ன பாஸ் DSLR கண்ட்ரோல் ஆப் டவுன்லோடு செய்யத்தானே போறீங்க...

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!English summary
While most of the cameras have remote control capabilities, not many of us are aware of them. These remotely controllable tools can come in very handy especially when you intend to shoot a time-lapse video, long exposure shots, or when you want to give your image a different perspective.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்