வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்துள்ள 'ஹைக்'. வாட்ஸ் அப்-க்கு போட்டியா?

Written By:

தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட போட்டி காரணமாக டேட்டா சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அள்ளி வழங்கி வருவதை போலவே சமூக வலைத்தளங்களும் புதிய வாடிக்கையாளர்களை கவரவும், இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்து கொள்ளவும், புதிது புதிதாக சலுகைகளை அறிவித்து வருகின்றனர்.

வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்துள்ள 'ஹைக்'. வாட்ஸ் அப்-க்கு போட்ட

அந்த வகையில் சமீபத்தில் வாட்ஸ் அப் தனது பயனாளிகளுக்கு கொடுத்த சலுகை வீடியோ அழைப்பு வசதி. இலவசமாக வழங்கப்பட்டு வரும் இந்த வீடியோ காலிங் வசதியை வாட்ஸ் அப் தற்போது ஆரம்பகட்டத்தில் வைத்துள்ளது.

ஆண்ட்ராய்டு போனில் ரீசைக்கிள் பின் வேண்டுமா? அப்படியெனில் இதை படியுங்கள்

ஆனால் வாட்ஸ் அப்-இன் போட்டி நிறுவனமான 'ஹைக்' (Hike) மெசஞ்சர் சமூக வலைத்தளம் தன்னுடைய அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வீடியோ காலிங் வசதியை அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் முதலே ஹைக் நிறுவனம் வீடியோ காலிங் வசதியை டெஸ்ட்டிங் பார்த்து வரும் நிலையில் தற்போது இந்த வசதியை செயல்படுத்த தொடங்கிவிட்டது.

வீடியோ அழைப்பு வசதியை அறிமுகம் செய்துள்ள 'ஹைக்'. வாட்ஸ் அப்-க்கு போட்ட

இந்தியாவில் 4ஜி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்னும் பெரும்பாலான பயனாளிகள் 2ஜியை உபயோகித்து கொண்டிருப்பதால் ஹைக் நிறுவனமும் 2ஜியிலேயே செயல்படும் வகையில் இந்த வீடியோ காலிங் வசதியை செய்துள்ளது. மேலும் இப்போதைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த வசதி இயங்கும் என்றும் வெகுவிரைவில் ஐபோன் பயனாளிகளுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

'குறிப்பாக' ஆண்ராய்டு போனில், ஆபாசப்படம் பார்க்க கூடாது. ஏன்..??

இனி ஆண்ட்ராய்டு போன் வைத்திருப்பவர்கள் ஹைக் வீடியோ வசதியை பெற என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்ப்போமா?

#1. நீங்கள் ஹைக் ஆப்-ஐ வைத்திருந்தாலும் செப்டம்பருக்கு பிந்தைய அப்டேட் ஆன ஹைக் ஆப்-ஐ உங்கள் மொபைலில் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

#2. நீங்கள் எந்த நண்பரிடம் பேச வேண்டுமோ அந்த நண்பரின் சாட் பக்கத்தை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்

#3. நண்பரின் பக்கத்தை தேர்வு செய்த பின்னர் வலது மேல்புறம் உள்ள 'கால்' பட்டனை டேப் செய்யுங்கள்

#4. இப்போது நீங்கள் வீடியோ கால் அல்லது வாய்ஸ் கால்'ஐ தேர்வு செய்யலாம். வீடியோவில் பேச வேண்டும் என்றால் வீடியோவையும் ஆடியோவில் பேச வேண்டும் என்றால் வீடியோவை ஆஃப் செய்தும் பேசலாம்.

மேற்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி உங்கள் நண்பரின், தோழியின், காதலியின் முகத்தை பார்த்து கொண்டே பேசி மகிழுங்கள்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
India's first homegrown messaging app Hike Messenger has launched video calling feature for Android users.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்