இயற்கை பேரிடர்களின் போது உங்கள் பாதுகாப்பை உங்கள் குடும்பத்தினர் ஃபேஸ்புக் செய்யும் உதவி

By Siva
|

உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் தனது பயனாளிகளுக்கு புதுப்புது வசதிகளை அவ்வப்போது செய்து வரும் நிலையில் லேட்டஸ்டாக ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியுள்ள வசதி பயனாளிகள் பதிவு செய்யும் போஸ்ட்டை பாதுகாப்பது.

இயற்கை பேரிடர்களின் போது உங்கள் பாதுகாப்பை உங்கள் குடும்பத்தினர் ஃபேஸ்

முன்பு பயனாளிகளின் பதிவுகளை பாதுக்காக்கும் பணியை ஃபேஸ்புக்கே தன்னுடைய கையில் வைத்திருந்தது. ஆனால் உலக அளவில் பிரபலமானவர்களின் பதிவுகளை மட்டுமே ஃபேஸ்புக் பாதுகாத்து, பராமரித்து வந்தது.

ஐடியா 1 ஜிபி 3ஜி டேட்டா வெறும் ரூ.89/- தான், ஆனா..

ஆனால் தற்போது அதை பயனாளிகளிடையே பிரித்து கொடுத்துவிட்டது. உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் இந்த 'சேஃப்ட்டி செக்' என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி தங்களுடைய பதிவுகளை பாதுகாத்து கொள்ளலாம்

வாட்ஸ் அப் சேட்டிங் உரையாடல்களை டெக்ஸ்ட் ஃபைலாக பாதுகாப்பது எப்படி?

இனி நமது ஃபேஸ்புக் பதிவுகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்த வழிமுறைகளை பார்ப்போம்.

போஸ்ட்டை பதிவு செய்யுங்கள்

போஸ்ட்டை பதிவு செய்யுங்கள்

ஃபேஸ்புக் சேஃப்ட்டி செக்' என்ற பாதுகாப்பு அம்சத்தை பயன்படுத்தி நீங்க்ள் சந்திக்கும் பேரிடர் குறித்த போஸ்ட் ஒன்றை பதிவு செய்யலாம். இது உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் அறியும் வகையில் செய்யலாம். இந்த பேரிடர் குறித்த தகவல்கள், பாதிப்புகள், உதவிகள் போன்ற பதிவுகள் இதில் பதிவு செய்து கொண்டே வரலாம்.

சேஃப்ட்டி செக் பகுதிக்கு செல்லவும்

சேஃப்ட்டி செக் பகுதிக்கு செல்லவும்

இதுபோன்ற முக்கியத்துவமான பதிவுகளை பதிவு செய்த பின்னர் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது அந்த பதிவை பின் செய்து மேல்பகுதியில் வரும் வகையில் செய்ய வேண்டும். பின்னர் சேஃப்ட்டி செக் பகுதிக்கு சென்று அதை க்ளிக் செய்ய வேண்டும்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் என்பதை மார்க் செய்யவும்

நான் பாதுகாப்பாக இருக்கின்றேன் என்பதை மார்க் செய்யவும்

சேஃப்ட்டி செக் பகுதிக்கு சென்று அதை க்ளிக் செய்தவுடன் ஃபேஸ்புக் ஆட்டோமெட்டிக்காக உங்களை வழிநடத்தும். மேலும் நீங்கள் இருக்கும் பகுதி மற்றும் நீங்கள் பதிவு செய்த பேரிடர் குறித்த தகவல், உங்களுடைய நிலை ஆகியவற்றை குறிக்கும் ஆப்சன்கள் வரும்.

அதில் 'நான் பாதுகாப்பாக இருக்கின்றேன்' என்பதை நீங்கள் க்ளிக் செய்துவிட்டால் உங்கள் நண்பர்களும், குடும்பத்தினர்களும் உங்கள் பாதுகாப்பை தெரிந்து கொண்டு நிம்மதி அடைவர். சென்னையில் கடந்த ஆண்டை போல மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டால் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

உங்கள் நண்பரின் பாதுகாப்பையும் தெரிந்து கொள்ளலாம்

உங்கள் நண்பரின் பாதுகாப்பையும் தெரிந்து கொள்ளலாம்

இந்த சேஃப்ட்டி செக் வசதி உங்கள் பாதுகாப்பை மட்டும் உறுதி செய்வதோடு உங்கள் நண்பரின் பாதுகாப்பையும், அவர் இருக்கும் பகுதியின் நிலைமையையும் தெரிந்து கொள்ளலாம். ஒருவேளை உங்கள் நண்பரின் பகுதி ஆபத்தாக இருந்தால் ஃபேஸ்புக் அதை உங்களுக்கு உறுதி செய்யும் உடனே நீங்கள் அவருக்கு உதவி செய்ய முன்வரலாம்.

இன்னொரு வசதியும் விரைவில் வரப்போகுது

இன்னொரு வசதியும் விரைவில் வரப்போகுது

இயற்கை பேரிடர்களான வெள்ளம், பூகம்பம், கனமழை, ஆகியவற்றின்போது பாதிக்கப்பட்டவர்களுகான அடிப்படை தேவைகளான உணவு, உடை, குடிதண்ணீர் போன்றவைகளை பெறவும், சப்ளை செய்யவும் உதவும் வகையில் 'கம்யூனிட்டி ஹெல்ப்' என்ற புதிய ஆப்சன் விரைவில் வரவுள்ளது.

ஃபேஸ்புக் என்பது பொழுதுபோக்காக அரட்டை அடிப்பதற்கு மட்டுமல்ல, சமூக சேவைகள் செய்யவும்தான் என்பதை நிரூபிக்கும் வகையில் வருகை புதுப்புது வசதிகளை மனதார பாராட்டி வரவேற்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how users can activate safety check tool on their own in 3 simple steps, and no longer depending on Facebook anymore.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X