உள்ளே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஆப்.!

ஒரு பொருளின் உண்மையான மூலப்பொருளை அறிய வேண்டுமா? இதோ அதுக்கும் ஒரு ஆப்

By Siva
|

மனித வாழ்க்கையின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட ஸ்மார்ட்போன்கள் நாளுக்கு நாள் வசதிகளை அதிகரித்து கொண்டே வருகிறார். பேசிக் போன்களில் தொடங்கி ஆண்ட்ராய்ட் போன் வந்தது முதலும், அதேபோல் ஸ்மார்ட்போனில் கிராபிக் கேம்ஸ், தரமான DSLR கேமிரா, அசத்தலான டிஸ்ப்ளே, 4K வீடியோ ரெசலூசன் என ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு வருடமும் புதுப்புது வசதிகளை அதிகரித்து கொண்டே வருகின்ரனர்.

உள்ளே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஆப்.!

ஒரு பக்கம் ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் புதுப்புது வசதிகளை அதிகரித்து தங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் ஆப் தயாரிப்பாளர்களும் ஆச்சரியப்பட வைக்கும் அளவில் புதுப்புது ஆப்ஸ்களை தயாரித்து வருகின்றனர்.

என்னதான் விலை உயரந்த ஸ்மார்ட்போனாக இருந்தாலும், ஆப்ஸ்கள் இருந்தால்தான் அந்த போனுக்கு மதிப்பிருக்கும். எனவே புதுப்புது வித்தியாசமான ஆப்ஸ்களுக்கும் பெரும் வரவேற்பு உள்ளது.

இந்நிலையில் தற்போது களத்தில் புகுந்துள்ள ஆப்ஸ்களில் ஒன்று ஸ்பெக்ட்ரல் அனாலிசிஸ் என்று கூறப்படும் நிறமாலை பகுப்பாய்வு ஆப்ஸ். நாம் வாழ்க்கையில் நிஜத்தில் பார்க்கும் பொருட்களின் நிறங்களை நம் முன்னே ஆண்ட்ராய்ட் ஸ்க்ரீனில் நிறுத்த உதவும் ஆப்ஸ்தான் இது.

உள்ளே என்ன இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் ஆப்.!

ஜெர்மனியை சேர்ந்த முன்னணி நிறுவனம் ஒன்றின் பொறியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த ' ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் ஆப் (HawkSpex mobile) அடுத்த தலைமுறைக்கான முக்கிய ஆப்ஸ் ஆகும்

உறுதியானது விலை, நாளை முதல் - சியோமி ரெட்மீ 4 எக்ஸ்.!

இந்த பொறியாளர்களின் முக்கிய நோக்கம் ஒரு பொருளின் உண்மைத்தன்மையை அறிய வேண்டும் என்பதுதான். ஒரு பொருள் எதனால் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள இந்த ஆப்ஸ் உதவும்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும், அந்த பொருள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒளியை பிரதிபலிக்கும். அந்த ஒளியை இந்த ஆப்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள கேமிராவின் உதவியோடு கண்டுபிடிக்கும்

இந்த ஆப்-ஐ பொருத்த வரையில் கேமிராவின் பங்கு மிக முக்கியம். கேமிராவின் உதவியால் அலைவரிசையை கிரகித்து, இந்த ஆப்ஸில் ஏற்கனவே பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் மில்லியன் கணகான டேட்டாவின் மூலம் அந்த அலைவரிசை எந்த பொருளில் இருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்கின்றது.

நோக்கியா கருவிகளை கண்டு ஆப்பிள் 'மிரண்டுவிட்டது' போலும்.!

உதாராணமாக ஒரு காஸ்மிட்டிக் பொருள் எந்த பொருளினால் ஆனது என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் அந்த காஸ்மிட்டிக் பொருளை ஸ்மார்ட்போன் கேமிரா மூலம் ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் ஆப் படம் பிடிக்கும். பின்னர் அந்த பொருளின் ஒளி அலைவரிசையை கணக்கிட்டு தன்னிடத்தில் உள்ள டேட்டா உதவியால்

அந்த பொருளில் கலந்து இருக்கும் பொருளை உங்களை பொருட்களை உங்களுக்கு தெரிவிக்கும். ஒரு பொருளின் நிஜமான உண்மைத்தன்மையை தெரிந்து கொள்ள இந்த ஆப் உதவும் என்பதால் இது அடுத்த தலைமுறையினர்களுக்கான ஆப் என்று கூறுவதில் தவறில்லை. எனவே இனிமேல் ஒரு பொருளின் தயாரிப்பாளர்கள் தங்கள் தயாரிப்பின் மூல பொருளை மாற்றி கூற முடியாது.

இந்த பயனுள்ள ஹாக்ஸ்பெக்ஸ் மொபைல் ஆப் இந்த வருடத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
A Germany based research company has developed a new smartphone app that can run spectral analysis on any real world object to find out what it is made of without any accessories

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X