பழைய புகைப்படத்தை டிஜிட்டலாக மாற்ற உதவும் கூகுளின் போட்டோ ஸ்கேன் ஆப்

By Siva
|

சிறுவயதின் நிகழ்வுகளின் மலரும் நினைவு என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நிகழும் ஒரு அற்புதமான நிலை. அதிலும் சிறுவயதில் எடுத்த புகைப்படங்களை அவ்வபோது எடுத்து பார்த்து மகிழும் இன்பம் இருக்கின்றதே, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

பழைய புகைப்படத்தை டிஜிட்டலாக மாற்ற உதவும் கூகுளின் போட்டோ ஸ்கேன் ஆப்

ஆனால் அந்த காலத்தில், டிஜிட்டல் கேமிராக்கள் இல்லாத நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மங்கலாக இருக்கும். அவை தற்போதைய டிஜிட்டல் வடிவிற்கு மாற்றினால் எந்த அளவுக்கு சந்தோஷம் இருக்கும் என்பதை எண்ணி பாருங்கள்

ரூ.35,000 விலையில் டாப் 5 லாப்டாப்கள்.!

ஆம், கூகுள் இதற்கொரு வழியை தந்துள்ளது. பழைய மலரும் நினைவு புகைப்படங்களை ஒருசில நொடிகளில் இலவசமாக டிஜிட்டல் மயமாக்குகிறது. இதற்கு கூகுள் அறிமுகப்படுத்திய ஆப், போட்டோ ஸ்கேன் என்பதுதான். இனி பழைய புகைப்படங்களை இந்த போட்டோ ஸ்கேன் ஆப் மூலம் எப்படி டிஜிட்டலுக்கு மாற்றுவது என்பது குறித்து பார்ப்போமா...

பழைய புகைப்படத்தை டிஜிட்டலாக மாற்ற உதவும் கூகுளின் போட்டோ ஸ்கேன் ஆப்

1. போட்டோ ஸ்கேன் ஆப்-ஐ டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யுங்கள்:

முதலில் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களில் சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள போட்டோ ஸ்கேன் ஆப்-ஐ கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து பின்னர் உங்கள் மொபைலில் அதை இன்ஸ்டால் செய்யுங்கள். பின்னர் அதில் உங்கள் கணக்கை ரிஜிஸ்டர் செய்ய வேண்டும்

பழைய புகைப்படத்தை டிஜிட்டலாக மாற்ற உதவும் கூகுளின் போட்டோ ஸ்கேன் ஆப்

2. போட்டோ ஸ்கேன் மூலம் பழைய புகைப்படத்தை க்ளிக் செய்யுங்கள்:

ரிஜிஸ்டர் செய்த பின்னர் டிஜிட்டல் செய்ய வேண்டிய உங்களுடைய பழைய புகைப்படத்தை போட்டோ ஸ்கேன் ஆப் மூலம் க்ளிக் செய்து புகைப்படம் எடுங்கள். இப்போது உங்கள் பழைய புகைப்படத்தை போட்டோ ஸ்கேன் ஆப், நான்கு விதமான வகைகளில் உங்களுக்கு தரும்

பழைய புகைப்படத்தை டிஜிட்டலாக மாற்ற உதவும் கூகுளின் போட்டோ ஸ்கேன் ஆப்

3. ஒருசில நொடிகளில் டிஜிட்டலுக்கு மாற்றம்:

உங்கள் பழைய புகைப்படத்தை போட்டோ ஸ்கேன் மூலம் க்ளிக் செய்தவுடன் போட்டோ ஸ்கேன் அந்த புகைப்படத்தை சிறிதாக்கி அதில் உள்ள மங்கலான குறை உள்பட அனைத்து குறைகளையும் கண்டறியும்.

உபர் முதல் பயணத்தில் 100% கேஷ்பேக் பெறுவது எப்படி?

போட்டோ ஸ்கேன் ஆப் அதில் உள்ள குறைகளை நீக்கி டிஜிட்டலாக மாற்றியவுடன் தேவைப்பட்டால் புகைப்படத்தை கிராப் செய்து கொள்ளுங்கள். இப்போது பாருங்கள் பல வருடங்களுக்கு முன் எடுத்த மங்கலான புகைப்படம் நேற்று எடுத்தது போல் புத்தம் புதியதாக காட்சி தரும்.

இந்த பணிகள் அனைத்தையும் போட்டோஸ்கேன் ஆப் ஒருசில நொடிகளில் முடித்து உங்களை மகிழ வைப்பதுதான் இதன் முக்கியமான சிறப்பு அம்சம் ஆகும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Here's how you can scan your old memories and transform them into a digital format with these 4 simple steps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X