தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய போகிறீர்களா? இதோ உங்களுக்கு உதவும் சில ஆப்ஸ்கள்

By Siva
|

தீபாவளி திருநாள் என்பது ஒவ்வொரு இந்துக்களின் மிக முக்கிய பண்டிகை ஆகும். தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பே குடும்பத்தினர்கள் அனைவருக்கும் புத்தாடை, நகைகள் மற்றும் அணிகலன்கள் எடுத்து ஒவ்வொரு நாளும் வரப்போகும் தீபாவளியை எதிர்கொண்டு இருப்போம்.

தீபாவளிக்கு வீட்டை சுத்தம் செய்ய போகிறீர்களா? இதோ உங்களுக்கு உதவும்

இந்நிலையில் தீபாவளி தினத்திற்கு முந்தைய நாளோ அல்லது ஒருசில நாட்களுக்கு முன்னரோ வீட்டை சுத்தம் செய்வது வழக்கம்.

பேஸ்புக்கில் ஜிஃப் ப்ரொபைல் பிக்சர் ஆட் செய்வது எப்படி.?

தற்போதைய ஸ்மார்ட்போன் உலகில் நம்முடைய ஸ்மார்ட்போன் நமக்கு ரயில் டிக்கெட், ஃபிளைட் டிக்கெட், சினிமா டிக்கெட் உள்பட பல விதங்களில் உதவி வரும் நிலையில் இந்த சாதாரண வீட்டை சுத்தப்படுத்த உதவாதா என்ன? நமது வீட்டை நமது ஸ்மார்ட்போன் மூலம் சுத்தப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்

அர்பன்கிளாப் (Urbanclap) உங்கள் வீட்டை புதுவீடு போல் மாற்றிவிடும்

அர்பன்கிளாப் (Urbanclap) உங்கள் வீட்டை புதுவீடு போல் மாற்றிவிடும்

இந்த அர்பன்கிளாப் ஆப்-ஐ டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்தால் இதில் உங்கள் வீட்டை எப்படி , எளிதாக மிக குறைந்த விலையில் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சுத்தப்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதில் சென்று ஆர்டர் கொடுத்தால் போதும் ஒரு குறிபிட்ட தொகையில் உங்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருட்கள், பெயிண்டிங், வாஷ் ரூப், கிச்சன், சோபா மற்றும் திரைகள் உள்பட அனைத்தையும் சுத்தம் செய்து உங்கள் வீட்டை புதுவீடு போல் மாற்றிவிடுவார்கள். இவர்கள் வசூல் செய்யும் தொகை வீட்டின் அளவுக்கு தகுந்தவாறு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

பிரைட் நெஸ்ட் (BrightNest) ஆப் உங்கள் வீட்டை எப்படி சுத்தப்படுத்தும் என்பதை பார்ப்போமா?

பிரைட் நெஸ்ட் (BrightNest) ஆப் உங்கள் வீட்டை எப்படி சுத்தப்படுத்தும் என்பதை பார்ப்போமா?

இந்த ஆப்-இல் நீங்கள் ஆர்டர் கொடுத்தால் அவை உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவது மட்டுமின்றி வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளையும் எப்படி பாதுகாக்க வேண்டும், தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப வீட்டையும் வீட்டில் உள்ள பொருட்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பதையும் நமக்கு விரிவாக விளக்கும். இந்த ஆப்ஸ் கொடுக்கும் டிப்ஸ்களை நாம் வழக்கமாக பயன்படுத்தினால் நம்முடைய வீடு வருடந்தோறும் புதுவீடு போலவே காட்சி அளிக்கும்

ஹவுஸ் ஜாய் (Housejoy) ஆப் எப்படி செயல்படும் என்று தெரியுமா?

ஹவுஸ் ஜாய் (Housejoy) ஆப் எப்படி செயல்படும் என்று தெரியுமா?

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த இலவச ஆப், உங்கள் வீட்டை சுத்தப்படுத்துவதில் மிகுந்த அக்கறை எடுத்து கொள்ளும். குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யும் இந்த ஆப், உங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே கருதலாம். மேலும் உங்கள் வீட்டில் உள்ள பிரிட்ஜ், வாஷிங் மெஷின், கார்ப்பெட் ஆகியவற்றை எப்படி மெயிண்டன் செய்ய வேண்டும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த ஆப் உங்களுக்கு ஞாபகப்படுத்தும். இதுதான் ஹோம்ஜாய் ஆப்-இன் சிறப்பு

வீட்டை சுத்தப்படுத்த பிக்சி (Fixy) ஆப்-ஐ எப்படி பிக்ஸ் செய்ய வேண்டும் என்பது தெரியுமா?

வீட்டை சுத்தப்படுத்த பிக்சி (Fixy) ஆப்-ஐ எப்படி பிக்ஸ் செய்ய வேண்டும் என்பது தெரியுமா?

குறைந்த நேரத்தில் மிக எளிதாக எவ்வித சிரமமும் இன்றி வீட்டை சுத்தப்படுத்த வேண்டுமா? நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய ஆப், பிக்சி ஆப். இந்த ஆப்-இல் உள்ள சிறப்பு என்னவெனில் வீட்டில் உள்ள மர சாமான்கள், பைப் லைன் வேலைகள், ஏசி பழுதுகள், மின்சார சாதனங்களின் பழுதுகள் மற்றும் பலவிதத்திலும் உங்கள் வீட்டை இந்த ஆப் மூலம் நீங்கள் சுத்தம் செய்து கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
Save your time by downloading these Android apps on your smartphone, in order to make house cleaning process easy, less hefty and time-consuming

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X