இப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.!

ம்யூஸிக் ஆப் ஆன கானா ஆண்ட்ராய்டு ஆப்பில், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்க்கும் அப்டேட் நிகழ்த்தப்பட்டுள்ளது

Written By:

கானா, இந்தியாவின் மிகப் பெரிய இசை ஒளிபரப்பு வணிகமாகும், இந்த ம்யூஸிக் ஆப் ஆனது இப்போது நகரங்களுக்கு வெளியே உள்ள வாடிக்கையாளர்களுக்கு சென்றடையும் நோக்கில், எளிமையாக அனைவரும் ஆப்பை நுகரும் நோக்கில் ஆங்கிலம் தவிர்த்து இப்போது தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளில் கானா நுகர்வோருக்கு ஆப் கிடைக்க உள்ளது. அதாவது, இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, மற்றும் போஜ்புரி ஆகிய மொழிகளில் இப்போது கானா ஆப்பை அணுகலாம்.

இப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.!

கானா ஏற்கனவே பயனர்கள் தங்கள் மொழி விருப்பத்தை பில்டர் செய்ய அனுமதிக்கிறது, ஆனால் இப்போது வரையிலாக அது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்க்கப்பெற்றது. ஆனால் இந்த மேம்படுத்தலில், புதிய பயனர்கள் தங்கள் விருப்பமான மொழிகளை தேர்வு செய்துகொள்ளலாம் வசதி கிடைக்கும். நடப்பு பயனர்கள் செட்டிங்ஸ் சென்று அங்கு தங்களுக்கு தேவையான மொழி விருப்பங்களை மாற்றிக்கொள்ளலாம். இந்த வசதி இப்போது ஆண்ட்ராய்டில் அறிமுகமாகியுள்ளது மற்றும் விரைவில் ஐபோனிலும் அறிமுகம் செய்யப்படும்.

இப்போது கானா ஆப், தமிழ் உட்பட 9 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது.!

"கானாவின் நோக்கமானது, எப்போதும் இந்தியாவின் மிகச் சிறந்த இசை அனுபவத்தை வழங்க வேண்டும் என்பது தான். கானா 25 மில்லியன் நுகர்வோர்களை அடைந்து விட்டது. இறுதியாக இப்போது ஆங்கிலம் வாசிக்க முடியாத நூற்றுக்கணக்கான மில்லியன் இந்தியர்களையும் அடைய இருக்கிறது" என்று கானா-வின் சிஇஓ பிரஷாந்த் அகர்வால் கூறியுள்ளார். கானா, இந்தியா மிகப் பெரிய பன்முகத் டிஜிட்டல் வணிகமான டைம்ஸ் இண்டர்நெட்டின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
இண்டர்நெட், ஸ்மார்ட்போன் இன்றி பேடிம் அணுகல் : டோல்-ப்ரீ எண் அறிமுகம்..!
பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.?
எச்சரிக்கை : வாட்ஸ்ஆப்பில் உலவகும் மோசடி மெஸேஜ், யாரும் நம்ப வேண்டாம்.!

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


Read more about:
English summary
Gaana launches ability to use app interface in 9 Indian languages. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்