ஊர் சுற்றுவோருக்கு ஏற்ற அப்ளிகேஷன்கள்.!!

Written By:

நமக்கு தெரியாத பலவற்றை தெரிந்து கொள்ள எண்ணற்ற செயலிகள் பல்வேறு இயங்குதளங்களில் கிடைக்கும் போது தெரியாது என்ற பதில் ஏன் கூற வேண்டும். ஸ்மார்ட்போன் யுகத்தில் இன்று எல்லாமே செயலி எனும் ஆப்களில் முடிந்து விடுகின்றது.

பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் துவங்கியும், சிலருக்கு விரைவில் விடுமுறை காலம் வர இருப்பதையும் முன்னிட்டு இந்த தொகுப்பு பதிவு செய்யப்படுகின்றது. பொதுவாக விடுமுறை நாட்களில் எங்கேயும் சுற்றுலா செல்வோருக்கு உதவும் வகையில் இன்றைய தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கின்றது.

ஸ்மார்ட்போன் மூலம் இன்று உலகையே கையில் அடக்கி விடலாம். அவ்வாறு பயணம் செய்யும் போது உங்களுக்கு எவ்வித சந்தேகங்கள் ஏற்பட்டாலும் கச்சிதமாக உதவி செய்ய பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அவைகளில் சில ஸ்லடைர்களில்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Trip Advisor

பெயருக்கு ஏற்றார் போல் இந்த செயலி பயணம் சார்ந்த எல்லாவற்றிற்கும் பதில் வைத்திருக்கின்றது. பயணத்தை சிறப்பாக மேற்கொள்ள இந்த செயலி வழங்கும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். அனைவருக்கும் ஏற்ற பட்ஜெட்டில் சரியான ஆலோசனைகளை வழங்குகின்றது.

IRCTC Connect

நம் நாட்டில் பொதுவாக ரயில் பயணங்களை மேற்கொள்வது சற்றே சிரமமான காரியமாகவே கருதப்படுகின்றது. ஆனால் சில எளிய வழிமுறைகளை கையாண்டால் ரயில் பயணம் மிகவும் எளிமையானதாக இருக்கும். இதை மேற்கொள்ள ஐஆர்சிடிசி கனெக்ட் செயலி பயனுள்ளதாக இருக்கும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பயன்படுத்தலாம்.

RedBus

ரயில் அல்லது பேருந்து என எதுவாக இருந்தாலும் ரெட்பஸ் மூலம் பயணச்சீட்டு பெற்றுவிட முடியும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

OYO Rooms

பயணம் செய்ய எந்த ஊருக்கு சென்றாலும் தங்கும் அறையை முன்பதிவு செய்ய இந்த செயலி உதவியாக இருக்கும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Ola Cabs

பெரும்பாலானோரும் இந்த செயலியை பற்றி நன்கு அறிந்திருக்கலாம். அக்கம் பக்கத்தில் எங்கு சென்றாலும் மகிழுந்து சேவைகளுக்கு ஏற்ற செயலியாக இது இருக்கும். இந்த செயலியை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Cool Travel Apps for Anyone Planning A Trip Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்