பிஎஸ்என்எல்-ன் மொபைல் வேலட் சேவை.!

பயனர்கள் செய்ய வேண்டியது எல்லாம் "எஸ்பிஐ மொபிகேஷ்" என்ற இலவச ஆப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது தான்.!

|

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) உடன் கைகோர்த்து அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) மற்றொரு வாடிக்கையாளர் நட்பு மொபைல் பணப்பை (எம்-கைப்பை) சேவையை அறிமுகம் செய்துள்ளது.

நேற்று (திங்கள்) நிகழ்ந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வொன்றில் பிஎஸ்என்எல் (மதுரை) பொது முகாமையாளர் எஸ்.இ.ராஜம் கூறுகையில், ரூ.1000 மற்றும் ரூ.500/- தாள்களுக்கான தடைக்கு பின்னர் மக்கள் எலலா வசதிகளையும் பணமில்லா பணப்பரிவர்த்தனை மூலம் அனுபவிக்கும் வண்ணம் பல அம்சங்களை பணமின்றி மத்திய அரசு அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது என்றார்.

எஸ்பிஐ மொபிகேஷ்

எஸ்பிஐ மொபிகேஷ்

அதன் ஒரு பகுதியாக, பிஎஸ்என்எல் மற்றும் எஸ்பிஐ இணைந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் உள்ள சந்தாதாரர்களுக்கு கிடைக்கும் வண்ணம் எம்-வேலட் என்ற பணப்பை சேவையை வழங்கி வந்தது. பயனர்கள் செய்ய வேண்டியது எல்லாம் "எஸ்பிஐ மொபிகேஷ்" என்ற இலவச ஆப்பை தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டியது தான்.

மற்ற வங்கி

மற்ற வங்கி

பிஎஸ்என்எல் வலையமைப்பின் கீழ் உள்ள பகுதிகளில் இந்த மொபைல் ஆப் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் டெபாசிட் செய்யலாம், வித்ட்ரா செய்யலாம், வேலட்டில் இருந்து வங்கிக்கும், வங்கியில் இருந்து வேலட்டிற்கும் பண பரிமாற்றம் செய்யலாம் உடன் மற்ற வங்கி கணக்குகளுக்கும் பணப்பை மூலம் நிதி மாற்றம் செய்யலாம்.

கட்டாயமில்லை

கட்டாயமில்லை

எம்வேலட் சேவையின் சிறப்பம்சமாக, இந்த அப்பை பயன்படுத்த எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டிய கட்டாயமில்லை என்பது தான். நிதி பரிமாற்றம் (ஒரு நாளைக்காணன எல்லை வரம்பில்) தவிர இந்த ஆப் மூலம் சந்தாதாரர்கள் தங்கள் மொபைல் (பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட்) கட்டணங்களையும், பிஎஸ்என்எல் லேண்ட்லைன் மற்றும் போஸ்ட்பெயிட் கட்டணங்களையும் செலுத்தலாம்.

சுருக்கமாக

சுருக்கமாக

மற்றும் கிராமப்புற மற்றும் மாநிலத்தின் தொலை தூர இடங்களில் இருந்து பிஎஸ்என்எல் நெட்வொர்க் மூலம் ரீசார்ஜ் செய்யவும் முடியும். சுருக்கமாக, கை தொலைபேசியில் இருந்து, பொதுவான அனைத்து நிதி பரிவர்த்தனைகளையும் எளிதாக நிகழ்த்திக் கொள்ள முடியும்.

கேள்விகளுக்கு

கேள்விகளுக்கு

இந்த ஆப் சார்ந்த மேலும் பல கேள்விகளுக்கு www.tamilnadu.bsnl.co என்ற வலைத்தளத்தை அணுகவும் அல்லது 1503 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

'ஆதார் பே' வழியாக இனி பணமில்லை பரிவர்த்தனை..!

Best Mobiles in India

Read more about:
English summary
BSNL launches mobile wallet facility. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X