உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாமல் இருக்க உதவும் ஆப்ஸ்கள்

உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாமல் இருக்க உதவும் ஆப்ஸ்கள்

By Siva
|

இன்றைய அவசரகதியான உலகில் நம்முடைய முக்கிய பணிகள் ஒருசிலவற்றை நாம் தள்ளி போடும் நிலை ஏற்படும். பல கவனச்சிதறல் நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடுவதால் இந்த தள்ளி போடுதலை சில சமயம் தவிர்க்க முடியாது.

உங்கள் முக்கிய பணிகள் தள்ளி போகாமல் இருக்க உதவும் ஆப்ஸ்கள்

இந்த பழக்கம் நம்மிடையே அனைத்து நேரங்களிலும் இருக்காது. இருப்பினும் இந்த கவனச்சிதறல்களை தவிர்க்க உதவும் ஒருசில ஆப்ஸ்கள் இருக்கின்றது என்பது உங்களுக்கு தெரியுமா? இந்த ஆப்ஸ்களை பயன்படுத்தினால் பணியில் ஒருமுகமாக கவனம் செலுத்தி வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடையலாம்

நம்முடைய வாழ்க்கையில் குறுக்கிடும் கவனச்சிதறல்களை போக்கும் சிறந்த ஆப்ஸ்கள் ஐந்தை தற்போது பார்ப்போம்

செல்ப் கண்ட்ரோல் (Selfcontrol)

செல்ப் கண்ட்ரோல் (Selfcontrol)

உங்கள் கவனத்தை திசைதிருப்பக்கூடிய இணையதளங்களைத் தடுக்க நீங்கள் விரும்பும் போது இந்த ஆப்ஸ் உங்களுக்கு பயன்படுகிறது. இந்த செல்ப் கண்ட்ரோல் பயன்பாட்டை நீங்கள் ஒரு வலைத்தள தடுப்பு பட்டியலாக வரையறுக்கலாம்.

மேலும் இந்த ஆப்ஸை நீங்கள் நீக்க முயற்சித்தாலோ, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்ய முயற்சித்தாலோ இந்த ஆப்ஸ் தனது பணியை முடித்தவுடன் தான் அவற்றை அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்டெட்டாக்ஸ் (Appdetox)

ஆப்டெட்டாக்ஸ் (Appdetox)

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் தினமும் பல்வேறு ஆப்ஸ்களை பயன்படுத்தும் நிலையில் இருக்கின்றோம். சிலசமயம் இவை நமது நேரத்தை வீணாக்குகின்றன. இந்நிலையில் இந்த ஆப்டெட்டாக்ஸ் நமது அதிகப்படியான ஆப்ஸ் பயன்பாட்டை கட்டுப்படுத்தும்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் ஒரு ஆப்ஸை அதிக நேரம் பயன்படுத்தும்போது உங்களை இடைவேளை எடுத்து கொள்ளுமாறு இந்த ஆப் உங்களுக்கு ஞாபகப்படுத்தும்., எனவே அதிகநேரம் ஒரே ஆப்ஸில் இருக்கும் நிலை கட்டுப்படுத்தப்படும்

ஸ்குவாக் (Squawk)

ஸ்குவாக் (Squawk)

ஒருசில ஆப்ஸ்களை நாம் ஒருசில நேரங்களில் மட்டுமே பயன்படுத்திவிட்டு அப்படியே விட்டுவிடுவதுண்டு. அதற்கு பின்னர் அந்த ஆப் நமக்கு நெடுநாளைக்கு தேவை இருக்காது.

இப்படியான ஆப்ஸ்களை ஸ்குவாக் கண்டறிந்து ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பயன்படுத்தாத ஆப்ஸ்களை செயல்படாமல் நீக்கி, நமது போனின் மெமரியை மிச்சப்படுத்தும் வகையில் செயல்படுகிறது. இதனால் ஒருசில குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும் ஆப்ஸ்களை நீங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புரோகிராஸ்டர் (Procraster)

புரோகிராஸ்டர் (Procraster)

பொதுவாக நமக்கு அதிகமான, பெரிய வேலைகள் இருந்தால் அதை தள்ளிப்போடும் வகையில் நமது மனம் சோர்வடையும். இந்த சமயத்தில் இந்த ஆப், உங்களுடைய அதிகப்படியான வேலையை ஒழுங்குபடுத்தி பகுதி, பகுதியாக செய்து முடிக்க திட்டமிட உதவுகிறது. இதனால் உங்களுடைய பெரிய வேலையும் எளிதாக்கப்பட்டு உங்கள் பணி விரைவில் முடிய உதவுகிறது.

புரோகிராஸ்டினேஷன் பனிஷர் (Procarastination Punisher)

புரோகிராஸ்டினேஷன் பனிஷர் (Procarastination Punisher)

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒருசில குறிப்பிட்ட ஆப்ஸ்களை செயல் இழக்க செய்ய உதவும் ஆப்ஸ்தான் இது. இதனால் நம்முடைய அன்றாட பணியை ஒருசில குறிப்பிட்ட ஆப்ஸ்கள் தடை செய்யா வகையில் இந்த ஆப்ஸ் நம்மை பாதுகாத்து நமக்கு நல்ல பெயரையும் வாங்கி கொடுக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
In our day to day life, the opportunity for procrastination is endless like a god. Amidst a lot of distraction around us, it is indeed difficult to concentrate on our work, which leads to procrastinating.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X