இதெல்லாம் தெரிந்திருந்தால் ஃபேஸ்புக் மெசன்ஜர் அருமையான விஷயம்.!!

Written By:

ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசன்ஜர் செயலிக்கு தனி கவனம் செலுத்தி வருகின்றது. அந்த வகையில் ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் பல்வேறு மாற்றங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களில் வாடிக்கையாளர்களுக்கு பயனுள்ள ஏதேனும் ஒரு அம்சம் நிச்சயம் இருக்க தான் செய்கின்றது எனலாம்.

மெசன்ஜர் செயலியை குறுந்தகவல் அனுப்ப மட்டுமே பயன்படுத்துபவர் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மெசன்ஜர் செயலியில் பலரும் அறிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

பண பரிமாற்றம்

ஃபேஸ்புக் மெசன்ஜரின் புதிய அம்சம் மூலம் பயனர்கள் தங்களது நண்பர்களுக்கு பணம் அனுப்ப முடியும். இதை செய்ய டெபிட் / கிரெடிட் கார்டு தகவல்களை மெசன்ஜர் செயலியில் பதிவு செய்தால் போதும். தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாஸ்கெட் பால்

மெசன்ஜர் செயலியில் பாஸ்கெட் பால் கேம் விளையாட நண்பர் ஒருவருக்கு பாஸ்கெட் பால் ஸ்மைலியை அனுப்பி, அதனினை க்ளிக் செய்ய வேண்டும். களைப்பாக இருக்கும் போது கேம் விளையாடி மனதை மகிழ்ச்சியாக்கி கொள்ளலாம்.

டிராப் பாக்ஸ்

மெசன்ஜர் செயலியின் புதிய அப்டேட் மூலம் டிராப் பாக்ஸ் ஃபைல்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

வீடியோ சாட்

வீடியோ சாட் ஹெட்ஸ் எனும் புதிய அம்சம் மூலம் வீடியோ கால் செய்யும் போதும் சாட் ஹெட் இன்டர்ஃபேஸ் தெரியும்.

டெஸ்க்டாப் ஆப்

ஃபேஸ்புக் டெஸ்க்டாப் செயலி மூலம் கணினியில் ஃபேஸ்புக் செயலியை பதிவிறக்கம் செய்து நேரடியாக பயன்படுத்தலாம். எனினும் இந்த செயலியில் பல அம்சங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஹெல்லோ

ஃபேஸ்புக் நிறுவனத்தின் பிரத்யேக ஆண்ட்ராய்டு செயலியான ஹெல்லோ டையலர் அறிவீர்களா. இந்த செயலியை பயன்படுத்தி அழைப்புகளை மேற்கொள்ளும் போது மொபைலில் பதிவு செய்யப்படாத காண்டாக்ட்களை அறிந்து கொள்ள முடியும். இதற்கு அந்நிறுவனம் ஃபேஸ்புக் கணக்குகளை பயன்படுத்துகின்றது.

பின்

ஃபேஸ்புக் மெசன்ஜர் செயலியில் உறையாடல்களை பின் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை எனேபிள் செய்ய க்ரூப் சாட் சென்று வலது பக்கம் க்ளிக் செய்து மோர் என்ற ஆப்ஷனில் பின் டூ க்ரூப்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.

லொகேஷன்

நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் கடந்த ஆண்டு மெசன்ஜர் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க

வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.??

ஸ்மார்ட்போன் வேகத்தை அதிகரிக்க 5 நிமிடம் போதும்.!!

முகநூல்

இது போன்ற தொழில்நுட்பம் மற்றும் உலகின் வினோத தகவல்களை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
Awesome Things Facebook Messenger could do Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்