ஜிமெயிலா.? கூகுள் இன்பாக்ஸா..? எது சிறந்தது..?!

Written By:

சமீபத்தில், கூகுள் தனது மாற்று மின்னஞ்சல் ஆப் (alternative email app) ஆன 'இன்பாக்ஸ்'-ல் (Inbox) சில சிறந்த அப்டேட்களை வழங்கி, பயனர்களுக்கு மேலும் எளிமையான ஒரு ஆப் ஆக உருவாக்கம் பெற்றுள்ளதாய் தெரிகிறது. மேம்படுத்தப்பட்டஇன்பாஸில் நல்ல அம்சங்கள் நிறைய உள்ளன, மேலும் அவைகள் மூலம் ஒரு எளிமையான வழியில் மின்னஞ்சல்களை நிர்வகிக்க உதவுமாம்.

ஜிமெயிலில் இல்லாதது அப்படி என்ன இன்பாக்ஸில் உள்ளதோ..? கூகுளின் 'இன்பாக்ஸ்' ஆனது ஜிமெயிலை விட சிறந்தது என்பதை உணர்ந்தும் ஏழு காரணங்களைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

#1

மின்னஞ்சல்களை கூட்டுதல்

#2

'இன்பாக்ஸ்' உங்களுக்கு வரும் ஒரே மாதரியான/ வகையான மின்னஞ்சல்களை ஒரே போல்டராக சேமித்து வைக்கும். இதன் மூலம் சிரமமின்றி மின்னஞ்சல்களை ஒழுங்குப்படுத்த முடியும்.

#3

முக்கிய இணைப்புகளை சேமித்தல்

#4

இன்பாக்ஸ்-ல் நீங்கள் மீண்டும் மீண்டும் படிக்க விரும்பும் மின்னஞ்சலை சேமித்து வைக்க முடியும், இன்பாக்ஸ் ஆப் பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது க்ரோம் எக்ஸ்டென்ஷனில் விருப்பட்ட கட்டுரைகளை சேமித்து பின்பு படிக்கலாம்.

#5

ரிமைண்டர்கள் (Reminders)

#6

இன்பாக்ஸ் ஆப் மூலம் நேரடியாக ரிமைண்டர்களை உருவாக்கிக் கொள்ள முடியும். உடன், எதிர்வரும் நிகழ்வுகள் மற்றும் நிகழ்வுகளை பற்றிய தகவல்களை கொண்ட மின்னஞ்சல்களைப்பற்றியும் இன்பாக்ஸ் ஆப் உங்களுக்கு நினைவூட்டும்.

#7

மீண்டும் காண்பிக்கப்படும் மின்னஞ்சல்கள்

#8

அதிகப்படியான மின்னஞ்சல்களின் குவியலில் சில முக்கியமான ரிசர்வேஷன் மற்றும் கன்பிர்மேஷன் இமெயில்களை அதிக நேரம் செலவு செய்து தேடிட நேரிடும். இன்பாக்ஸ் ஆப்பில் குறிப்பிட்ட இமெயில் மெசேஜ்களை குறிப்பிட்ட நேரத்தில் மற்றும் தேதியில் உங்கள் இன்பாக்ஸில் மீண்டும் தோன்ற வைக்க முடியும்

#9

தகவல் அட்டை (Info Card)

#10

வரவிருக்கும் முக்கியமான பயணம் அல்லது ஒரு இடம் பற்றிய முழு தகவலும் உங்களுக்கு தேவையா.? இன்பாக்ஸ் உங்களுக்கு உதவும். இன்பாக்ஸ் ஆப் ஆனது தேவைப்படும் குறிப்பிட்டவிடயம் சார்ந்த ஒரு விரைவான எளிமையான முறையில் தகவல் அட்டை ஒன்றை உருவாக்கி கொடுக்கும்

#11

நியூஸ்லெட்டர்ஸ் (Newsletters)

#12

குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒருமுறை தேவைப்பட்டுக் கொண்டே இருக்கும் இமெயில்தனை இனிமேல் மீண்டும் மீண்டும் இன்பாக்ஸ்-ல் தேட வேண்டிய அவசியமே இல்லை. இன்பாக்ஸ் ஆப்பில் ஹைலைட் வசதி உண்டு..!

#13

ஸ்மார்ட் ரிப்ளைகள் மற்றும் ரிமைண்டர்கள்

#14

இன்பாக்ஸ் ஆப்பில் நினைவூட்டல்கள், பயனுள்ளதாக தகவல் மற்றும் இணைப்புகளை சரியான நேரத்தில் காட்டும் வசதி உள்ளது. உடன் வரும் மின்னஞ்சல்களுக்கு தொடர்புடைய பதில்களை பரிந்துரைக்கவும் செய்யும்.

#16

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்

Read more about:
English summary
7 reasons why Google’s Inbox is better than Gmail. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்