ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ள 5 முக்கிய சுவாரஸ்ய வசதிகள்

By Siva
|

ஃபேஸ்புக்கின் பயனாளிகள் ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே வரும் நிலையில் ஃபேஸ்புக்கும் தனது பயனாளிகளுக்கு நாளுக்கு நாள் புதிய பல வசதிகளை அதிகரித்து கொண்டே செல்கின்றது.

ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தவுள்ள 5 முக்கிய சுவாரஸ்ய வசதிகள்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளுக்கு ரூ.10,000 தள்ளுபடி : ஸ்னாப்டீல் அறிவிப்பு!

ஏற்கனவே நாம் எதிர்பார்க்காத பல்வேறு வசதிகளை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தியிருக்கும் நிலையில் விரைவில் மேலும் ஐந்து முக்கிய வசதிகள் வரவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வசதிகள் என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்,

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஸ்லோ கனெக்சன் வைத்திருப்பவர்களுக்காக மெசஞ்சர் லைட்

ஸ்லோ கனெக்சன் வைத்திருப்பவர்களுக்காக மெசஞ்சர் லைட்

பழைய மாடல் போன் வைத்திருப்பவர்களுக்கும், ஸ்லோ இண்டர்நெட் கனெக்சன் வைத்திருப்பவர்களும் தங்கு தடை இன்றி ஃபேஸ்புக்கை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதுதான் ஃபேஸ்புக் லைட். இந்த மெசஞ்சர் லைட் ஆப், நார்மல் ஃபேஸ்புக் மெசஞ்சரில் உள்ளது போலவே கிட்டத்தட்ட டெக்ஸ்ட்கள், புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள் ஆகியவற்றை அனுப்பலாம.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

'மெசஞ்சர் டே' (Messenger Day) வசதியில் என்ன இருக்குது தெரியுமா?

'மெசஞ்சர் டே' (Messenger Day) வசதியில் என்ன இருக்குது தெரியுமா?

Snapchat-ல் உள்ள பல விஷயங்கள் ஃபேஸ்புக்கிலு வந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவும் அதுபோல Snapchat-ல் உள்ள ஒரு அம்சம்தான். இந்த

'மெசஞ்சர் டே' ஆப் மூலம் நீங்கள் உங்கள் நண்பருக்கோ, உறவினருக்கோ அல்லது குடும்பத்தினர்களுக்கோ மெசேஜ்கள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என எதை வேண்டுமானாலும் அனுப்பலாம். ஆனால் ஒரே ஒரு விஷயம் நீங்கள் அனுப்பும் அனைத்து வகை அம்சங்களும் அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் என்பது மட்டுமே இதன் ஸ்பெஷாலிட்டி. இந்த வசதி Snapchat-ல் ஃபேமஸ் என்பது அதை பயன்படுத்தி வருபவர்களுக்கு தெரியும்

இதன் மூலம் சர்வேயும் செய்யலாம்

இதன் மூலம் சர்வேயும் செய்யலாம்

ஃபேஸ்புக் மெசஞ்சரில் உங்களுக்கு கிடைக்கும் இன்னொரு வசதி Poll என்று கூறப்படும் கருத்துக்கணிப்பு வசதி. நீங்கள் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றாலோ, அல்லது ஒரு ஓட்டலுக்கு போக வேண்டும் என்றாலோ அல்லது எதுவேண்டுமானாலும் இந்த Poll ஐகானை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம். இந்த ஆப், ஃபேஸ்புக் குரூப்பில் இருப்பவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து ஓட்டு போடுவார்கள்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

டுவிட்டரையும் காப்பி அடிக்குதாமே

டுவிட்டரையும் காப்பி அடிக்குதாமே

ஃபேஸ்புக், Snapchat-ஐ மட்டும் காப்பி அடிப்பதில்லை. எங்கு நல்ல விஷயங்கள் இருக்கின்றதோ அதை காப்பி அடித்து தன்னுள் வைத்து கொள்ளும். அப்படியான ஒரு வசதிதான் டிரெண்ட்ஸ் என்று கூறப்படும் தற்போது அதிகளவு பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் என்ன என்பது? உங்கள் நண்பர்களோ அல்லது பயனாளிகளோ அதிக அளவு எந்த விஷயத்தை பற்றி விவாதித்து கொண்டிருக்கின்றார்களோ அதை உங்களுக்கு தெரியப்படுத்துவதுதான். இது டுவிட்டரில் டிரெண்ட் என்று கூறப்படுவதுண்டு

பேமெண்டும் இதில் நடக்குதா?

பேமெண்டும் இதில் நடக்குதா?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு அம்சம் இதுதான். ஃபேஸ்புக் மூலம் பணம் டிரான்ஸ்பர் செய்வது. அவசர தேவைக்கோ அல்லது முக்கியமான பேமெண்ட்களோ உங்கள் டெபிட் கார்டு அல்லது வேறு ஏதாவது வழிகள் மூலம் செலுத்தும் வசதி. அதுமட்டுமின்றி பேபால் போல வேறு வகை ஆப்சன்கள் மூலமும் ஃபேஸ்புக்கில் இருந்தே பேமெண்ட் செலுத்தலாம் என்பதுதான்

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Here are 5 features that Facebook is currently testing, and has plans to launch very soon.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X