ஃபேஸ்புக்கில் இருக்கும் ஐந்து நெகட்டிவ் உண்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?

By Siva
|

இன்றைய டெக்னாலஜி உலகில் ஃபேஸ்புக் இல்லாமல் ஒருவர் வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டது.

ஃபேஸ்புக்கில் இருக்கும் ஐந்து நெகட்டிவ் உண்மைகள் குறித்து உங்களுக்கு

ஒரு இமேஜை பதிவு செய்வது, ஸ்டேட்டஸ் போடுவது, அவ்வப்போது பரபரப்பான செய்திகளை பகிர்வது போன்ற பல பாசிட்டிவ் அம்சங்கள் ஃபேஸ்புக்கில் இருந்தாலும் ஒருசில நெகட்டிவ் விஷயங்கள் ஃபேஸ்புக்கில் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? இந்த உண்மைகளை நீங்கள் அறிந்தால் நீங்கள் ஃபேஸ்புக்கில் இருந்து விலக நினைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இரண்டு அடுக்குப் பாதுகாப்பு வளையத்தில் வாட்ஸ்ஆப்.!

சமீபத்தில் ஃபேஸ்புக்கால் பயனாளிகளின் பிரைவசி பாதிக்கப்படுவதாகவும் உலகம் முழுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதேபோல் ஃபேஸ்புக்கில் இருக்கும் ஐந்து நெகட்டிவ் உண்மைகளை தற்போது பார்ப்போம்

பிரைவசி கொள்கைகளின் கேள்விக்குறி

பிரைவசி கொள்கைகளின் கேள்விக்குறி

ஃபேஸ்புக்கில் நீங்கள் பதிவு செய்யப்படும் உங்களுடைய பெர்சனல் தகவல்கள் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. சமீபகாலமாக ஃபேஸ்புக் பலரது தனிப்பட்ட விஷயங்களை ஃபேஸ்புக் பகிர்ந்து வருவதாகவும், நம்முடைய நண்பர்கள் வட்டத்தில் இல்லாதவர்களுக்கும் நம்முடைய தகவல்கள் அனுப்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை டிராக் செய்கிறதா?

தனியார் நிறுவனங்கள் நம்முடைய தகவல்களை டிராக் செய்கிறதா?

பல பெரிய நிறுவனங்களுக்கு பேஸ்புக் நம்முடைய தகவல்களை டிராக் செய்ய வசதி கொடுத்துள்ளது என்பது நம்ப முடியாத உண்மை. இந்த தகவல்களின் அடிப்படையில் ஒருசில தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தின் விளம்பரங்களை அனுப்புகின்றனர். இது முழுக்க முழுக்க வியாபார நோக்கம் என்பதால் வியாபாரத்திற்காக நம்முடைய தனிப்பட்ட தகவல்களை பிறருக்கு அனுப்புவதை நாம் ஏற்க முடியுமா?

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஃபேஸ்புக் உறவுகளை பிரிக்கின்றதா?

ஃபேஸ்புக் உறவுகளை பிரிக்கின்றதா?

முன்பெல்லாம் ஒரு விசேஷம் என்றாலோ அல்லது ஒரு துயரம் நடந்தாலோ நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் நேரில் சென்று தகவல் தெரிவிப்போம். இப்போது ஃபேஸ்புக்கில் ஒரே ஒரு ஸ்டேட்டஸ் போட்டு தகவல்களை பரிமாறி கொள்கிறோம். அதேபோல் உறவினர்களும் வாழ்த்துக்களோ அல்லது இரங்கல்களோ அதே பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தெரிவித்து விடுகின்றனர். இதில் உறவினர்கள், நண்பர்கள் நேரில் பார்ப்பதும் உறவை வளர்ப்பதும் தவிர்க்கப்படுகிறது. இது எதிர்கால சந்தத்திக்கு நல்லதா? என்பதை எண்ணி பார்க்க வேண்டும்

ஃபேஸ்புக்கிற்கு ஏன் அடிமையாக வேண்டும்?

ஃபேஸ்புக்கிற்கு ஏன் அடிமையாக வேண்டும்?

ஃபேஸ்புக் என்று ஒன்று வந்ததில் இருந்து பலரது கவனம் அதில்தான் பெரும்பாலும் திரும்பிவிட்டது. சில சமயம் அத்தியாவசிய வேலையை விட்டுவிட்டு ஃபேஸ்புக்கை நோண்டிக்கொண்டிருப்பதால் பெரும் பாதிப்பும் ஏற்படுகிறது. பயணம் செய்யும்போது, வேலை நேரத்தின் போது, ஓய்வின் போது என எப்பொதுமே ஃபேஸ்புக்கிற்கு அடிமையாக இருப்பதால் ஒரு மனிதனின் பெரும்பாலான காலம் வீணாகிறது. காலம் பொன் போன்றது. கடந்து போன காலத்தை ஒருநாளும் நாம் திரும்ப பெற முடியாது. எனவே ஃபேஸ்புக்குக்கு என ஒருசில குறிப்பிட்ட காலத்தை மட்டும் செலவு செய்வது நன்று

உங்கள் தனிமை பாதிக்கப்படுகின்றதா?

உங்கள் தனிமை பாதிக்கப்படுகின்றதா?

ஃபேஸ்புக்கில் நீங்கள் ஒரு ஸ்டேடஸ் போட்டால் உடனே நீங்கள் எங்கிருந்து எந்த இடத்தில் இருந்து அந்த ஸ்டேட்டஸை போட்டீர்கள் என்பதை மற்றவர்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது. இது உங்களது தனிமையை கண்டிப்பாக பாதிக்கும் செயல்களில் ஒன்று என்பது பலரது குற்றச்சாட்டாக உள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

Read more about:
English summary
You think you're safe on Facebook, while you share your personal details? Well, you're wrong! Check it out why?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X