மொஸில்லா பயர்பாக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசர்

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் பெரும்பாலானோர் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் பிரெளசரைத்தான் பயன்படுத்துவார்கள் என்பது தெரிந்ததே. ஏனெனில் பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும், பல சிறப்பு அம்சங்களும் இதில் உள்ளன,.

By Siva
|

இந்நிலையில் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தினர் தற்போது ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துபவர்களுக்கான புதிய பிரெளசரை வெளியிட்டுள்ளனர்.

மொஸில்லா பயர்பாக்ஸ் அறிமுகப்படுத்தும் புதிய ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசர

ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் என்று அழைக்கப்படும் இந்த பிரெளசர் ஐபோன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால் அது மிகையாகாது.

வாட்ஸ் அப் வீடியோ அழைப்பில் நீங்கள் அறியாத ஐந்து சிறப்பு அம்சங்கள் என்ன?

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசரில் விளம்பரங்களை தானாகவே பிளாக் செய்யும் ஆப்சன், பிரெளசர் ஹிஸ்ட்ரியை அவ்வப்போது தானாகவே டெலிட் செய்யும் ஆப்சன், அதேபோல் அவ்வப்போது குக்கியை க்ளியர் செய்யும் ஆப்சன் இருப்பதால் உபயோகிப்பாளர்களுக்கு உற்ற நண்பனாக இது விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளம்பரதாரர்களால் ஏற்படும் தொல்லைகள்

விளம்பரதாரர்களால் ஏற்படும் தொல்லைகள்

நாம் பயன்படுத்தும் பல்வேறு பிரெளசர்களில் நமக்கு அதிகபட்ச எரிச்சலை தருவது விளம்பரங்கள்தான். ஒரு முக்கிய செய்தியை பார்ப்பதற்காக நாம் ஒரு இணையதளத்தின் முகவரியை டைப் செய்தால் அந்த இணையதளம் ஓப்பன் ஆகும் முன் பலவித விளம்பரங்கள் தோன்றி நம்மை எரிச்சலைடைய செய்யும்.

அதுமட்டுமின்றி நமது தேவைக்கு ஏதாவது ஒரு பொருள் குறித்து சியர்ச் செய்தால் போதும், அந்த பொருளின் விளம்பரங்கள் நம்முடைய ஐபியை டிராக் செய்து தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபடத்தான் தற்போது வெளிவந்துள்ளது மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசர்.

விளம்பரங்களை பிளாக் செய்யும் டிராக்கர் சாப்ட்வேர்

விளம்பரங்களை பிளாக் செய்யும் டிராக்கர் சாப்ட்வேர்

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசரில் உள்ள முக்கிய அம்சமே விளம்பரங்களை பிளாக் செய்யும் டிராக்கர் சாப்ட்வேர் தான்.

இந்த சாப்ட்வேர் விளம்பர நிறுவனங்கள் நம்முடைய ஐபியை டிராக் செய்யாமல் தடுப்பதால் நாம் ஏற்கனவே பார்த்த விளம்பரங்கள் தொடர்ந்து நம்மை தொல்லை படுத்தாது. அதுமட்டுமின்றி எளிமையான எளிதில் லோட் ஆகும் தன்மை இருப்பதால் நாம் விரும்பும் பக்கம் உடனே திரையில் தெரியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சஃபாரியுடன் ஒரு போட்டி

சஃபாரியுடன் ஒரு போட்டி

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இதே போல் விளம்பரங்களை டிராக் செய்யும் சாப்ட்வேருடன் வெளிவந்துள்ளது சஃபாரி ஆப். இந்த ஆப் ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக பயனாளிகளுக்கு சேவை செய்து வரும் நிலையில் தற்போது அதே சிறப்பு அம்சத்துடன் மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசர் வந்துள்ளது. எனவே இதுவரை தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்த சஃபாரிக்கு சரியான போட்டி பிரெளசராக இது மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேறு என்ன சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது தெரியுமா?

வேறு என்ன சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது தெரியுமா?

பயன்படுத்துபவர்களுக்கு எளிமையானது, டேட்டா அதிக செலவில்லாமல் லோட் ஆகும் தன்மை, பிரவைசி பாதுகாக்கப்படுவது, ஆன்லைன் தாக்குதலை எதிர்க்க பவர்புல் சாப்ட்வேர், ஆகிய முக்கிய அம்சங்கள் உள்ளதால் கம்ப்யூட்டரை போலவே ஐபோனிலும் இந்த பிரெளசரை அனைவரும் விரும்பி பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொஸில்லா ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ் பிரெளசரை ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இலவசமாக டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். இந்த பிரெளசர் ஆண்ட்ராய்டு மாடலுக்கு எப்போது வரும் என்று பலர் மனதில் கேள்வி கேட்பது எங்களுக்கு கேட்கிறது. அவர்களுக்கான பதில், விரைவில் வெளிவரும் என்பதுதான்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Hide from advertisers' eyes using Mozilla Firefox's new iPhone browser.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X